இருந்திரப்பட்டியில் பங்குனி தேரோட்டம்!

இருந்திரப்பட்டியில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-02 06:13 GMT

தேரோட்டம் 

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பூச்சொரிதல் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பங்குனி திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரோடும் திருவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் தொடங்கிய தேரோட்டம் இரவு 7.10 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி பக்தர்கள் மாவிளக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தேரோட்ட விழாவையொட்டி பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தண்ணீர்பந்தல் அமைத்து நீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், மண்டகப்படிதாரர்கள், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News