பங்குனி உத்திர தீர்த்தக்குட, பால்குட ஊர்வலம்
குமாரபாளையம் அருகே வட்டமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட, பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. குமாரபாளையம் அருகே வட்டமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள், பால் குடங்கள் எடுத்தவாறு பெண்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மஞ்சள் ஆடையணிந்து பங்கேற்றனர்.போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு யாக சாலை பூஜை, சங்கு பூஜை நடந்தது. கே.ஓ.என். தியேட்டர் அருகே உள்ள முருகன் கோவில் சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிட அலகு குத்தியவாறு வந்தனர். உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், தேவாங்கர் மாரியம்மன் கோவில் முருகன் கோவில், அனைத்து சிவன் கோவில்களில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது.