பங்குனி உத்திரவிழா தீர்த்தவாரி

திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி அம்மன் அக்னீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, தீர்த்தவாரி நடந்தது.

Update: 2024-03-25 08:57 GMT

திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி அம்மன் அக்னீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, தீர்த்தவாரி நடந்தது.

பங்குனி உத்திரவிழா தீர்த்தவாரி திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீஅக் னீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, தீர்த்தவாரி நடந்தது.

பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பான அபிஷேகம் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த் திகளுக்கு (விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டி கேஸ்வரர்) புஷ்ப அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு நாதஸ்வரத்தில் மல்லாரி முழங்க, கோபுர தரிசனம் தந்து யானை முன்செல்ல ஜெண்டை மேளம், தப்பாட்டம், அம்மன் தெய்வ உருவங்கள்,ஆடும் குதிரை, ஒட்டகம் ஆகியவற் றுடன் வீதிஉலா நடந்தது. அக்னி தீர்த்தத்திலும், காவிரி ஆற்றிலும் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

. இரவு காவரி ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்ட பந்தலில் பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பான மஹாஅபிஷேகம் நடந் தது. எதிரில் அமைக்கப்பட்ட பந்தலில் திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News