மயிலம் தமிழ் கலைக்கல்லூரியில் உலக பன்னிரு திருமுறை மாநாடு

மாநாட்டில் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-17 05:55 GMT
மயிலம் தமிழ் கலைக்கல்லூரியில் உலக பன்னிரு திருமுறை மாநாடு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலைய சுவாமிகள் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் தமிழ் உலா-2023 ஆருத்ரா உலக பன்னிரு திருமுறை மாநாடு நடைபெற்றது. இதற்கு மயிலம் பொம்மபுர ஆதீ னம் 20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் கேப்டன் ராஜூகுமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிக ளார் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கி சிறப்புரையாற்றினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு இட்டலிங்க யோகா புத்தகத்தை வெளியிட்டு பேராசிரியர்களுக்கு விருது மற்றும் நாட்டி யாஞ்சலி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் திண்டிவ னம் கம்பன் கழக அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஞானஜோதி, ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடே சன், இந்திரா காந்தி தேசிய கலை மைய மண்டல இயக்குனர் கோபால் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சேதுநாதன், மாவட்ட பொரு ளாளர் ரவி, மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News