பாபநாசம் : அத்தனூர் அரிய செல்லம் கோவில் விழா

பாபநாசம் அருகே அத்தனூர் அரிய செல்லம் கோவிலில் நடந்த பால்குட மற்றும் உற்சவர் வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-05-13 08:29 GMT

பால்குட ஊர்வலம் 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கஞ்சிமேடு பகுதியில் அமைந்துள்ள அத்தனூர் அரிய செல்லம் ஆலய பால்குடம் மற்றும் உற்சவர் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் பாபநாசம் திருமலைராஜன் ஆற்றின் மேல் கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம் காவடி பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து திருக்கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கஞ்சிவார்தலும் நடைபெற்றது மாலையில் உற்சவர் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது உற்சவ வீதி உலா முடிந்து திருக்கோயில் வந்தடைந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்
Tags:    

Similar News