பாபநாசம் : ருத்ர மகா காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

பாபநாசம் ருத்ர மகா காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடந்த அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Update: 2024-05-13 08:33 GMT

அபிஷேக ஆராதனை

பாபநாசம் வங்காரம்பேட்டை ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் அமைந்திருக்கும் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . அது சமயம் காலையில் பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் பால்குடம் அக்கினி கொப்பரை சூலம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்து அடைந்தனர் மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர் இதற்காக ஏற்பாடுகளை வங்காரம்பேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனர் .
Tags:    

Similar News