பாபநாசம் : மின் கம்பியில் அடிபட்டு மயில் பலி
பாபநாசம் அருகே மின்சார கம்பியில் அடிபட்டு இறந்த மயிலின் சடலத்தை மீட்டு வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.;
Update: 2024-04-21 08:28 GMT
உயிரிழந்த மயில்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை ஆவுல்காரத் தெருவில் மின்சார பறந்து வந்த மயில் மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கி அடிபட்டு கீழே விழுந்து இறந்து விட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட வனத்துறை சரகர் ரஞ்சித் உத்தரவின் பேரில் பாபநாசம் வனவர் ரவி வனத்துறை ஊழியர் ஜெயபால் ஆகிய விரைந்து வந்து இறந்த மயிலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை செய்து திருமலை ராஜன் ஆற்றங்கரையில் அடக்கம் செய்தனர்.