பெரம்பலூரில் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி

பெரம்பலூரில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-04-03 10:31 GMT

பெரம்பலூரில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், வாக்குச்சாவடிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றுவதற்காக ஒடிசாவில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவ படையினர் 200க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல், படையினர் என மொத்தம் சேர்ந்து 450 பேர் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பங்கேற்றனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஏப்ரல் மூன்றாம் தேதி காலை 10:30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதிய பேருந்து நிலையத்தில் பகுதியில் துவங்கிய இந்த அடையாள அணிவகுப்பு பயிற்சியானது, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை கடைவீதி பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று , மீண்டும் காமராஜர் சிக்னல், ரோவர் வளைவு வழியாக பாலக்கரை பகுதியில் முடிவடைந்தது, மேலும் இந்த அணிவகுப்பின் காவல் துறையின் அதிநவீன பாதுகாப்பு வாகனங்களும் அணிவகுத்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News