கவாத்து பயிற்சி நிறைவு விழா- எஸ்பி பங்கேற்பு
அரியலூரில் ஊர்காவல் படையில் சேர 38 பேருக்கு கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-17 14:28 GMT
நிறைவு விழாவில் கலந்து கொண்டவர்கள்
அரியலூர் மாவட்ட ஊர் காவல் படையினருக்கு கடந்த ஆண்டு 38 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டனர். இவர்களுக்கு 45 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி வழங்கபட்டது. இந்நிலையில் பயிற்சி காலம் முடிந்து பணிக்கு செல்ல உள்ள நிலையில் பயிற்சி நிறைவு விழா அரியலூர் ஆயுதபடை அலுவலக மைதானத்தில் இன்று நடைப்பெற்றது.
இதில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மேலும் காவல் துறையுடன் இணைந்து நல்ல முறையில் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதபடை காவலர்கள் கலந்து கொண்டனர்.