தஞ்சாவூரில் துணை ராணுவத்தினர், காவல் துறையினர் அணிவகுப்பு

மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், உரிய பாதுகாப்போடும் நடத்துவதற்காக தஞ்சாவூரில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-03-19 04:49 GMT

கொடி அணிவகுப்பு ஊர்வலம்

 தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 90 பேர் அடங்கிய துணை ராணுவ வீரர்கள் தஞ்சாவூருக்கு மார்ச் 8 ஆம் தேதி வந்தனர். தஞ்சாவூரில் தங்கியுள்ள இந்தத் துணை ராணுவ வீரர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மக்களவைத் தேர்தலை அமைதியாகவும், உரிய பாதுகாப்புடன் நடத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் ஏதுவாக துணை ராணுவ வீரர்கள், காவல் துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலையிலிருந்து புறப்பட்ட இந்த அணிவகுப்பு பர்மா காலனி, பூச்சந்தை வழியாக மேரீஸ் கார்னரில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தை தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தொடங்கி வைத்தார். இதில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பி.என்.ராஜா, நித்யா, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், துணை ராணுவத்தினர் என 200 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News