பரந்தூர் விமான நிலையம் - நில எடுப்புக்கு டி.ஆர்.ஓ., நியமனம்

Update: 2023-12-19 03:36 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் என இரு தாலுகாக்களில், பரந்துார் சுற்றிய 20 கிராமங்களில் அமைய உள்ளது. இந்த திட்டத்திற்கு தேவைப்படும் 5,700 ஏக்கர் நிலத்தில், 3,774 ஏக்கர் நிலம், அங்குள்ள கிராம மக்கள், விவசாயிகளிடம் இருந்து ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது.

இதற்காக, மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள், மூன்று துணை கலெக்டர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த அதிகாரிகளின் கீழ், 24 தாசில்தார்கள், 24 துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட 24 அலகுகள் அமைக்கப்பட்ட, 326 வருவாய் துறை ஊழியர்கள் நில எடுப்புக்காக பணியாற்ற உள்ளனர். நில எடுப்புக்கு நியமிக்கப்பட உள்ள மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களில், முதற்கட்டமாக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவரை, பரந்துார் விமான நிலைய நில எடுப்புக்காக நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தனி கட்டடம் தேவை என்பதால், நில எடுப்பு அலுவலகம் செயல்பட, தனியார் இடமோ அல்லது அரசு இடமோ தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

Tags:    

Similar News