புதுகையில் பூங்கா திறப்பு!
புதுக்கோட்டையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் செம்மொழி பூங்கா திறப்பு.
Update: 2024-02-25 07:16 GMT
புதுக்கோட்டையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூற்றாண்டு பேனா நினைவு சின்னம் வடிவமைத்து கட்டப்பட்ட கலைஞர் செம்மொழி பூங்காவை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன் பிறகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூங்காவை பார்வையிட்டு ஸ்கேட்டிங் தொடக்கி வைத்தனர் புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி சாலையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அது நவீன தொழில்நுட்ப பூங்கா கலைஞர் செம்மொழி நினைவு பூங்காவாக கட்டப்பட்டு வந்தது இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து இன்று காணொளி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் இந்த பூங்காவில் பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்கள் மியூசிக்கல் நீர் ஊற்று உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது மேலும் 13 அடி உயரமுள்ள பேனா நினைவு சின்னமும் கட்டப்பட்டுள்ளது தமிழகத்திலேயே புதுக்கோட்டையில் தான் பேனா நினைவு சின்னம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்த பின்னர் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் இதன் பின்னர் அமைச்சர் பூங்காவை பார்வையிட்டு ம் பந்தயத்தை தொடங்கி வைத்தார் இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்களோடு யோகா சென்டர் மெடிடேஷன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது