முச்சந்தியம்மன் கோவிலில் பார்வேட்டை உற்சவம்

மாசிமக பார்வேட்டையை முன்னிட்டு வில்லிவலம் முச்சந்தியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;

Update: 2024-03-03 05:28 GMT

முச்சந்தியம்மன்

காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், முச்சந்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாசிமக பார்வேட்டை உற்சவம் நடைபெறும். நடப்பாண்டு மாசிமக பார்வேட்டை உற்சவம், நேற்று மதியம் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு முயல் விடும் நிகழ்ச்சியும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் முச்சந்தியம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது."
Tags:    

Similar News