பயணியர் நிழற்குடை திறப்பு

ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பயணியர் நிழற்குடையை எம்.பி., நவாஸ் கனி திறந்து வைத்தார்.

Update: 2024-02-23 06:27 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பஸ் ஸ்டாண்டில் ரூ7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையை பாராளுமன்ற உறுப்பினர் எம் பி நவாஸ் கனி இன்று திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராகிய பின்பு மாவட்டம் முழுவதும் 2000 சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புண்ணிய ஸ்தலங்கள் மற்றும் இதர பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 20 க்கும் மேலான உயர் கோபுரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐந்திற்கும் மேலான பயணியர் நிலைக் குடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என்றார். கொரோனா காலங்கள் இரண்டு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது.

மேலும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மிகப்பெரிய தொகுதி ஆகும் இங்கு ஐந்து கோடி ரூபாய் எம்பி நிதி என்பது மிகவும் குறைந்த அளவே வழங்கப்படுகிறது. வரும்காலங்களில் இதை உயர்த்தி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பெரியபட்டினம் எஸ்டிபி கட்சியின் சார்பில் பெரிய பட்டினத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதால் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எம்பி நவாஸ்கனியிடம் மனு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் நசீர் முகைதீன், வருசைமுகமது, அப்துல் ஜப்பார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News