மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறால் சுரங்கத்தில் சிக்கித் தவித்த 300 பயணிகள்!!

சென்னையில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Update: 2024-07-11 09:23 GMT

 மெட்ரோ ரயில் 

சென்னை மெட்ரோ ரெயிலில் திடீரென தீர்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மத்தியில் கூச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில் அவரசாமக நிறுத்தப்பட்டுள்ளது. விம்கோ நகர்- விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரெயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெயில் நிறுத்தியதை தொடர்ந்து ரெயிலில் பயணித்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News