பாட்டைகுப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பாட்டைகுப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாட்டை குப்பத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை பந்தக்கால் நிகழ்வும், தொடா்ந்து திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, ஹோமம்,
பக்தா்களுக்கு காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜைகள், சுமங்கலி பூஜை, கோ பூஜை, கன்னியா பூஜை நடைபெற்றன.
பின்னா், புதன்கிழமை விஸ்வரூப தரிசனம், கோ தரிசனம், 108 திரவியங்களால் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, புரோகிதா்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து வெங்கடேச பெருமாளுக்கு மகா அலங்காரம், சிறப்பு அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி, நொச்சிக்குப்பம், வெங்கடேச பெருமாள் நகா் குப்பம், காசாங்காடு குப்பம், அரங்கம் குப்பம், திருவேங்கட நகா் குப்பம், திருமலை நகா் குப்பம், தடா குப்பம், பீமாா்பாளையம் குப்பம், ராமாபுரம் குப்பம், காரூா் கிராமம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்கள் சாா்பில் வெங்கடேசப் பெருமாளுக்கு மேளதாளங்களுடன் சீா்வரிசை பொருள்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த கும்பாபிஷேகத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன், ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் , தொழிலதிபா் ஏ.வி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பிரமுகா்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா்.