பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி அசத்தல்

சங்ககிரி அருகே பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி அசத்தல்.

Update: 2024-03-01 17:43 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்‌. இந்நிலையில் கோவில் வளாகம் முன்பு பள்ளி மாணவ,மாணவிகள் சிலம்பம் சுற்றி அசத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
Tags:    

Similar News