விபத்தில் நோயாளி பலி - டெம்போ டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
ஆம்புலன்ஸ் விபத்தில் நோயாளி பலி - டெம்போ டிரைவருக்கு 2 ஆண்டு சிறை.
Update: 2024-04-24 04:51 GMT
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சன்னதி தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (60). தச்சுத் தொழிலாளி. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி குளச்சல் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஸ்கேன் எடுப்பதற்காக ஆம்புலன்ஸில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். சுங்கான்கடை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த கேரளா மாநிலம் வெள்ளரடை பகுதியை சேர்ந்த திலீப் என்பவர் ஓட்டி வந்த டெம்போ ஒன்று ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் சுந்தரம் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரம் இறந்து போனார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியல் கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவில் நீதிபதி அமீர்தின் டெம்போ டிரைவர் திலீப்புக்கு 2 வருஷம் கடுங்காவல் தண்டனையும், ரூ 11 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ரேவதி வாதாடினார்.