நவீன வசதியுடன் ரவுண்டு ரோடு நடைபாதை சீரமைப்பு
Update: 2023-11-08 11:17 GMT
திண்டுக்கல் ரவுண்டு ரோடு எனப்படும் வட்டச் சாலை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். 1½ கி.மீ சுற்றளவு கொண்டது. குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி. குண்டும் குழியுமாக இருந்த ரவுண்டு ரோடு சாலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அப்போதைய திண்டுக்கல் நகராட்சி சேர்மனாக இருந்த நடராஜன் முயற்சியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாக மாற்றப்பட்டது. தற்போது 1000க்கும் மேற்பட்டோர் இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 1½கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. மேலும் ரவுண்டு ரோடு பகுதி தரம் உயர்த்தப்பட்டு மிளிரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.