நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - முதியவர் பலி
விருதுநகர் சாத்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த முதியவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.;
Update: 2024-02-05 03:30 GMT
விருதுநகர் சாத்தூர் சாலையில் வி ஆர் டி சி வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு விருதுநகர் பெத்தனாச்சி நகர் பகுதியைச் சார்ந்தவர் அணுகாந்தி [70] இவர் மகன் சரவணக்குமார் அனுகாந்தி சாக்கு தைக்கும் தொழில் கூலி வழியாக செய்து வருவதாகவும் வேலையை முடித்துவிட்டு விருதுநகர் சாத்தூர் சாலையில் பி ஆர் டி சி வங்கி முன்பு வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அல்லம்பட்டியைச் சார்ந்த சீதாலட்சுமி என்ற பெண் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது .இதில் அணுகாந்திக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். இந்த சிகிச்சையில் இருந்த மருத்துவர்கள் அணுகாந்தியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதில் விபத்துக்கு காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த நபரின் மகன் சரவணக்குமார் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.