விதிமுறைகளை பின்பற்றாத கழிவு நீர் அகற்றும் வாகனங்களுக்கு அபராதம்
Update: 2023-11-22 08:14 GMT
அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள்
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் இயங்கி வரும் உரிமம் பெற்ற கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் உரிம நிபந்தனைகளை பின்பற்றாமல் கசடு கழிவு மேலாண்மை விதியை மீறி செயல்பட்டு வருவதாகவும், தினசரி சேகரிக்கப்படும் கசடு கழிவுகளை நகராட்சி சுத்தகரிப்பு மையத்தில் அகற்றாமல் நீர்நிலைகளில் அகற்றி வருதல்,வாகனத்தை கண்காணித்திட ஜிபிஆர்எஸ் செயலி இயக்கத்தில் இல்லாமல் இருந்தது மற்றும் வாகனத்தின் இயக்கப் பதிவேடு பராமரிக்காமல் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.திருச்செங்கோடு நகர் பகுதியில் உள்ள இரண்டு கழிவு நீர் வாகனங்களுக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இதுபோல் தொடர்ந்து விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.