வள்ளியூரில் போக்குவரத்து காவலர்கள் அதிரடி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் போக்குவரத்து காவல்துறையினர் அரசு பேருந்து;
Update: 2024-05-24 17:42 GMT
அரசு பேருந்திற்கு அபராதம் விதித்தனர்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் போக்குவரத்து காவலர்கள் இன்று (மே 24) திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற மூன்று அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுனருக்கும் 500 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஓட்டுநர்களிடம் கொடுத்து அனுப்பினர்.