நரிக்குறவர் குடியிருப்புக்கு அபராதம் - ரத்து செய்யக் கோரிக்கை

நரிக்குறவர் வீடுகளுக்கு மின்வாரியம் ரூ.27ஆயிரம் வரை அபராதம் விதித்ததை ரத்து செய்யக் கோரி கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப்பிடம் நரிக்குறவர் சங்க தலைவர் தேவேந்திரன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-12-19 07:40 GMT

கூடுதல் ஆட்சியரிடம் மனு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் கனந்தம்பூண்டி கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு பசுமை வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. இதில் தற்போது 67 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தங்களது வீடுகளுக்கு மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் மின்கட்டணம்செலுத்த தவறியவர்களுக்கு மின்சார வாரியம் குறைந்த பட்சம் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.27 ஆயிரம் வரை அபராதம் விதித்தது. ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்து வரும் தங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டதை பார்த்த நரிக்குறவர் இன மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். ஆனால் பலனில்லை.

இதையடுத்து நரிக்குறவர் சங்கத் தலைவர் என். தேவேந்திரன் என்கிற தேவா தலைமையில் 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மின்சாரத்துறை விதித்த அபராதத் தொகையை ரத்து செய்யக் கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப்பை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர். மின்சாரத்துறை விதித்த அபராதத் தொகையை ரத்து செய்யவும், தங்கள் பகுதியில் நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News