பிளாஸ்டிக் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
ராணிப்பேட்டையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
Update: 2024-05-28 13:10 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆணையாளர் தலைமையில் வண்டி மேட்டு தெரு பஜார் தெருவில் உள்ள பழக்கடைகள் கூலி இறைச்சி கடைகள் மற்றும் இதர கடைகளில் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 8.5 கிலோகிராம் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு மொத்த ரூபாய் 6000 அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.