கற்கண்டில் சீனி கலந்து விற்றவருக்கு அபராதம்

சாத்தான்குளம் அருகே கற்கண்டில் கலப்படம் செய்து விற்றவருக்கு ரூ.15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Update: 2024-06-07 04:53 GMT

நீதிமன்றம் 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிவிளை கிராமத்தை சோ்ந்தவா் கென்னடி ராயப்பன் (50). இவா் கற்கண்டு தயாரித்து விற்பனை செய்து வந்தாா். இந்நிலையில், சாத்தான்குளம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கென்னடி ராயப்பன் கற்கண்டு தயாரிக்கும் இடத்தில் சோதனை செய்த பொழுது கற்கண்டில் சீனி கலந்து விற்பனை செய்ததாகவும், மேலும் பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டு அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, தொழிலாளி கென்னடி ராயப்பனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு கூறினாா். மேலும் ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டாா்.

Tags:    

Similar News