நெய்வேலியில் தவாக கலந்தாய்வு கூட்டம்

நெய்வேலியில் தவாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-12-15 12:39 GMT

தமிழக வாழ்வுரிமை கட்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஊடகப்பிரிவு செயல் பாட்டாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மாவட்டம் நெய்வேலி வினோத் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்து நிலை ஊடகப்பிரிவின் பொறுப்பாளர்களை நியமனம் செய்து ஒன்றியம், நகரம், பேரூர் தோறும் ஊடகப்பிரிவு சார்பில் கட்சியின் வளர்ச்சி பணி குறித்து, கட்சி நடத்திய அனைத்துப் போராட்டங்களையும், தலைவர் அவர்களின் போராட்ட வீரியம் குறித்தும் Velmurugan. T என்ற முகநூல் பக்கத்தில் பதியப்பட்டு நாடெங்கும் நடத்திய போராட்டங்களை கொண்டு செல்வதென தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் உள்ளது. ஆனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு "இணையச் செயற்பாட்டாளர்களே" ஊடகமாகச் செயல்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

தலைவர் செயல்பாடுகளையும், தமிழர் விரோத- சட்ட திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களையும், கட்சியின் நலத்திட்ட உதவிகளையும், கட்டமைப்பு பணிகளையும், தொடர்ந்து வெகுசன மக்களிடத்தில் கொண்டு செல்லும், மகத்தான பணிகளை ஊடகப்பிரிவு தம்பிகள் மேற்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News