மார்க்கெட் வளாகத்தில் மாடுகளால் பொதுமக்கள் அச்சம்

ராஜாஜி மார்க்கெட் ஒழுகியதோடு, சகதியாக மாறியதால், வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி. அங்கு காய்கறி கழிவுகளை சண்டையிட்டு உண்ணும் மாடுகளால் அச்சம். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.;

Update: 2024-01-29 06:53 GMT

 மார்க்கெட் வளாகத்தில் மாடுகளால் பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், 1933ல் கட்டப்பட்ட பழமையான ராஜாஜி மார்க்கெட் கட்டடம் மழைக்காலத்தில் ஒழுகியதோடு, சகதியாக மாறியதால், வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுமானப் பணி நடைபெறுவதால், 2022ம் ஆண்டு, அக், 30ல், ராஜாஜி மார்க்கெட் ஓரிக்கைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. ஓரிக்கையில் இயங்கும் தற்காலிக மார்க்கெட் பின்புறம், வியாபாரிகள் கொட்டும் காய்கறி கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. இதனால், அப்பகுதியில் மேய்ச்சலுக்காக வரும் மாடுகள், மார்க்கெட் பின்புறம் குவியலாக கிடக்கும் குப்பையை கிளறி, அதில் கிடக்கும் காய்கறிகளை உண்கின்றன. இதில், மாடுகளுக்குள் சண்டை ஏற்படும்போது சந்தைக்கு வந்து செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மாடுகள் முட்டி காயப்படுத்தும் சூழல் உள்ளது. இதனால், சந்தைக்கு வருவோர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, மார்க்கெட் பின்புறம் கொட்டப்படும் காய்கறி, கழிவுகளை தினமும் அகற்றவும், மார்க்கெட் வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
Tags:    

Similar News