குழந்தையை கடத்த வந்ததாக கூறி வடமாநில நபரை கட்டி வைத்த மக்கள்

இராசிபுரம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக கூறி வட மாநில நபரை கட்டி வைத்தனர்.;

Update: 2024-03-08 17:23 GMT

வடமாநில வாலிபரை கட்டி வைத்த மக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தூக்க முயன்றதாகவும், பெற்றோர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்த வண்டியை திருடி செல்ல முயன்றதாகவும் வட மாநில நபரை பிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடித்து கட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் போலீசார் வட மாநில தொழிலாளரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் : பிடிபட்ட நபர் ஆண்டகளூர் கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்த போது அங்கு இருந்தவர்கள் அடித்து துரத்தியதாகவும் ,

Advertisement

இந்நிலையில் அங்கிருந்து வந்த வட மாநில நபர் பாலப்பாளையம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து குழந்தைகளை கடத்த முயன்றதாகவும் , பெற்றோர்கள் கூச்சல் இடவே அங்கிருந்த இருசக்கர வாகனத்தை தேடிச் செல்ல முயற்சி செய்தபோது பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்ததாக தெரிவித்தனர்.

மேலும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் குழந்தைகள் கடத்தப்படுவதாக குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது குழந்தை கடத்துவதற்கு வடமாநிலத்தவர்கள் வந்ததாக பொதுமக்கள் கட்டி வைத்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News