கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!
கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்துள்ளனர்.
நூறாண்டு காலம் பழமை வாய்ந்த புதுக்கோட்டை நகராட்சி தற்போது மாநகராட்சியாக ஆக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது அறிவித்த நாள் முதல் இந்த 11 ஊராட்சியை சேர்ந்த 9பி, 9 ஏ, திருமலையா சமுத்திரம், முள்ளூர் ஊராட்சி, திருக்கட்டளை ஊராட்சி, நமணசமுத்திர ஊராட்சியில் மூன்று வார்டுகள், உள்ளிட்ட 11 ஊராட்சிகளை புதுக்கோட்டை மாநகராட்சி உடன் இணைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். குறிப்பாக சாலை மறியல் கடையடைப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகை மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 3000 பேர் மனு கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினார்கள் ஆனால் இவை அனைத்திற்கும் திமுக அரசு செவிசாய்க்கவில்லை இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெறும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்திருந்தார்
இதனை அடுத்து 11 ஊராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் இன்று காலை அந்தந்த பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தினர். குறிப்பாக ஊராட்சிகளிலேயே மிகப்பெரிய ஊராட்சியான முள்ளூர் ஊராட்சியில் இன்று காலை கிராம சபை கூட்டம் தொடங்கியது.
ஆனால் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் யாரும் அந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை உடனே அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதற்கு பொதுமக்கள் நாங்கள் பல்வேறு வகையான போராட்டங்கள் செய்தோம். இதுவரை நீங்கள் எங்கள் கோரிக்கை செவிக்க வைக்கவில்லை மேலும் எங்கள் பகுதியை சுற்றி தைல மரங்கள் உள்ளன அதனை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதையும் நீங்கள் கோரிக்கை ஏற்க வில்லை மேலும் மாநாடு சேர்த்தால் வீட்டு வரி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மத்திய அரசு வீடு கட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் பாதிக்கப்படும் என நாங்கள் பலமுறை கூறினோம் .
ஆனால் நீங்கள் எதையும் செவிசாய்க்கவில்லை இன்று மட்டும் கிராமசபை கூட்டத்திற்கு வாருங்கள் என கூப்பிட்டால் எப்படி வருவது என புறக்கணித்தனர் இதனால் அப்போது சிறிது நேரம் பரபரப்படைந்தது இருந்தாலும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை ஈடுபட்டாலும் அதனை பொதுமக்கள் முழுமையாக இருக்காமல் இந்த கிராமசப கூட்டத்தை புறக்கணித்தார்கள் மேலும் எவ்வித தீர்மானங்களும் இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது