கீரனூரில் கோயில் பிரச்சனை காரணமாக மக்கள் சாலைமறியல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கீரனூரில் உள்ள கோயில் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 12:19 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கீரனூரில் உள்ள கோயில் பிரச்சனை காரணமாக இன்று அப்பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொப்பம்பட்டியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.