ராமநாதபுரம் : மக்கள் தொடர்பு திட்ட முகம்

ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகே சின்னாண்டிவலசை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-15 09:33 GMT

மக்கள் தொடர்பு திட்ட முகாம் 

ராமநாதபுரம்,  கீழக்கரை வட்டம், சின்னாண்டிவலசை கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாளர்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் மனுக்கள் பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் ,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்க அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள், அதனடிப்படையில் பல்வேறு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வலையில் துறைவாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு அனைத்துத்துறை அரசு அலுலவர்களும் சென்று அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அரங்கங்கள் அமைத்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பார்கள் பொதுவாக அரச திட்டங்களை தெரிந்து கொள்ள தொழில்நுட்பங்கள் இருந்தாலும் நம்முடைய பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்படும் அரங்குகள் மூலம் நம்முடைய தேவைகளையும், திட்டங்களையும் எளிதில் பெறுவதற்குரிய உதவிகளையும் தேரில் சென்று கேட்டு பயன்பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், தற்பொழுது அறுவடை காலம உள்ளதாலும், ஒரு சில பகுதிகளில் அறுவடை மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளதாலும் அறுவடை செய்த நெல்லினை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அணுகி பயர்பெற்றிட வேண்டும் , மேலும் அறுவடை காலத்திற்குப் பிறகு தங்கள் பகுதிகளில் என்ன பயிர்விதைக்கலாம் என்பது தொடர்பாக வேளாண்மை சார்ந்த அலுவலர்களை அணுகி தெரிந்து கொண்டு பயிரிட்டு பயர் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாணிமைத்துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் உத்தாவும், 20 பயனாளிகளுக்கும் நத்தம் பட்டா மாறுத்தும் 06 பயனாளிகளுக்கும் முழுப்புலம் பட்டா மாறுதல் உத்தரவும், 12 பயனாளிகளுக்கு இலவச பட்டா ரூ.1.80,000/- மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 04 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், மற்றும் 01 பயனாளிக்கு விலையில்லா சலயை பெட்டியும் ரூ.26,286/ மதிப்பீட்டிலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 03 பயனாளிகளுக்கு விகையில்லா சலவைப்பெட்டி ரூ.19,656/- மதிப்பீட்டி வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் 03 பயனாளிகளுக்கு பேயர் பிளாக் சாலை அமைக்க ரூ.13.45 இலட்சம் பெறுவதற்கான ஆணையினையும், 01 பயனாளிக்கு சின்னாண்டி வலசை ஊராட்சியில் தனிநபர் உறிஞ்சிக்குழி ரூ.14 இலட்சம் மதிப்பீட்டிலும் வேளாண்மைத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்று வழங்குதல் ரூ.3235/ மதிப்பீட்டிலும், 02 பயனாளிகளுக்கு வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தார்ப்பாய் வழங்குதல் ரூ. 10,283/- மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 02 பயனாளிக்கு பழக்கடை ரூ.300/- பதிப்பீட்டிலும், சமூக நலத்தையின் மூலம் 14 பயனாளிகளுக்கு தாலிக்கு primi ரூ.12,46,038/ மதிப்பீட்டிலும், 04 பயனாளிக்கு முதலமைச்சரின் பெண்ணின் பாதுகாப்பு திட்டம் ரூ.1,00,000/- மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனணியி நலத்துறையின் மூலம் 02 பயனாளிக்கு மூன்று சக்கர வாகனம் ரூ.2,10,000/- மதிப்பீட்டிலும் மொத்தம் 89 பயனாளிகளுக்கு ரூ.45,47,800/- இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்னு சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோ கோபு , சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்லி , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி , கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், சின்னாண்டி வலசை ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News