உடைந்த டிரான்ஸ்பார்மர் கம்பங்களை மாற்ற மக்கள் கோரிக்கை

வேப்பேரி கிராமத்தில் உள்ள உடைந்த டிரான்ஸ்பார்மர் கம்பங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-05 16:04 GMT

உடைந்த டிரான்ஸ்பார்மர் கம்பங்களை மாற்ற மக்கள் கோரிக்கை

நெமிலியை அடுத்த வேப்பேரி கிராமத்தில் இருந்து கீழ்வீதி செல்லும் சாலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்கள் உடைந்து சிமெண்டு பூச்சுகள் முழுவதும் உதிர்ந்து கம்பிகள் எலும்புகூடு போல் காட்சியளிக்கிறது.இதனால் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்படும்போது அதனை சரிசெய்ய ஊழியர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.

கீழ்வீதி வழியாக நெமிலி செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த டிரான்ஸ்பா்மர் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மழை மற்றும் பலத்த காற்று வீசும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பங்களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News