மதுரை மக்களே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
மதுரை மாநகராட்சி மூன்று நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்யப்படுகிறது மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி வைகை அணையில் பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காப்பணை (COFFER DAM) அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ள இருப்பதால் மூன்று நாட்கள் குடிநீர் நிறுத்தம். மதுரை மாநகராட்சி வைகை குடிநீர் விநியோகம் வைகை குடிநீர் 1 மற்றும் 2 மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகை அணையில் பிக்கப் வியர் ஷட்டர் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
அப்பணிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட காப்பாணையை (coffer dam) அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் எதிர்வரும் 01.07.2024 மதியம் முதல் 03.07.2024 அன்று மதியம் முடிய வைகை தென்கரை மற்றும் வைகை வடகரை பகுதிகளான பழைய மாநகராட்சி 72 வார்டுகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.