பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதை கண்டித்து போராட்டம்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி உடன் கதிராமங்கலம் ஊராட்சியை இணைப்பதாக கூறப்படும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சலுகைகள் கிடைக்காமல் பாதிக்கும் சூழ்நிலை இருப்பதால் பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்

Update: 2024-06-13 16:20 GMT

மக்கள் எதிர்ப்பு

. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிராமங்கலம் ஊராட்சியை வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பாதிப்படைவார்கள் என்றும் , ஏழ்மை நிலையில் பெரும்பாலான மக்கள் இப்பகுதியில் வசித்து வருவதால் பேரூராட்சியோடு மாற்றிய பிறகு குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் அதிகரிக்கும் சூழல் இருப்பதாகவும் , மேலும் வெள்ள காலங்களில் அரசின் உதவிகள் கிடைக்க பெறாமல் போய்விடும் நிலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேரூராட்சியில் கதிராமங்கலம் ஊராட்சியை இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என இன்று கிராம தலைவர் கலியமூர்த்தி தலைமையில் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி உடன் கதிராமங்கலம் ஊராட்சியை இணைப்பதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும் , இது போன்ற திட்டம் எதுவும் செயல்படுத்தவில்லை எனவும் விளக்கம் அளித்து மனுவினை பெற்றுக் கொண்டார்.

Tags:    

Similar News