பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்த பொதுமக்கள்

ஆற்றூர் பேரூராட்சியில் சாலை செப்பனிடாததை கண்டித்து பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டை பொதுமக்கள் வைத்துள்ளனர்.

Update: 2024-03-02 05:38 GMT

ஆற்றூர் பேரூராட்சியில் சாலை செப்பனிடாததை கண்டித்து பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டை பொதுமக்கள் வைத்துள்ளனர்.


குமரி மாவட்டம் ஆற்றூர் பேருராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் வெள்ளங்குழி பகுணியிலிருந்து மூவாற்றுமுகம் செல்லும் சாலையை சுமார் 20வருடத்திற்கு மேல் செப்பனிடபடாமல் சாலையிருந்த அடையாளமே இல்லாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது சுமார் 100குடும்பங்களுக்கு மேல் வசித்துவரும் இப்பகுதியில் மழைகாலங்களில் அவசரதேவைகளுக்கு கூட வாகனங்களில் சென்றுவரமுடியாத நிலை ஏற்படுவதாகவும் பலமுறை மாவட்டநிர்வாகம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாதால் கடந்த 2021ஆம் ஆண்டு இப்பகுதி மக்கள் சாலையிலுள்ள குழிகளில் வாழைநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அம்ருத் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக கடைசியாக 4மாதங்கள் அலகாசம் கேட்கபட்டிருந்தநிலையில் தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்தும் பணிகள் துவங்காததை கண்டித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சியனரும் தங்கள் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடகூடாது எனவும் இப்பகுதிமக்கள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்துள்ளதாகவும் கூறி ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு மூவாற்றுமுகம் சந்திப்பில் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர்.

Tags:    

Similar News