மழைநீர் பெருக்கெடுத்து ஓடிவதால் மக்கள் அவதி

சங்கரன்கோவில் அருகே மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-12-19 09:49 GMT

சங்கரன்கோவில் அருகே மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள காரிசாத்தான் கிராமத்தின் முகப்பு பகுதியில் தரைப் பாலத்துடன் கூடிய பெரிய நீரோடை அமைந்துள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகமான மழை பெய்ததால் அங்குள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பி தென்மலை பகுதியில் உள்ள முறியபஞ்சான் அணை நிரம்பி அதனுடைய உபரி நீரானது காரிசாத்தான் கிராமத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரிய நீரோடை தரைப்பாலம் வழியாக சென்று வருகிறது‌.

இந்நிலையில் மழைநீரானது காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுவதால் காரிசாத்தான் கிராமத்தை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்து தீவு போன்று காட்சியளிக்கிறது. மேலும் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தவித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்காலிகமாக அக்கரையில் இருந்து இக்கரைக்கு கயிறு கட்டி பொதுமக்கள் ஆபத்தான முறையில் அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்று வருகின்றனர். மேலும் இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் இரண்டு நாட்களாக அத்தியாவசிய தேவைக்கு கூட கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மருத்துவ முகாம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து தர வேண்டும் எனவும், மேலும் நீண்ட கால கோரிக்கையான அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News