குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி!
அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி ஊராட்சியில் உள்ள ஊரணியில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்
இலுப்பூர்:அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி ஊராட்சியில் உள்ள ஊரணியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் கோடைக்காலம் காரணமாக நீர் வேகமாக வற்றி வருகிறது. இதன் காரணமாக, சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக குளத்தில் இருந்த மீன்கள் கடந்த சில நாட்களாக இறந்து மிதக்க தொடங்கியுள்ளன. இதுதவிர குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் பைகள், குப்பைகள் கிடப்பால் துர்நாற் றம் வீசுவதுடன், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குளத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொது மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, ஊர் ணியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் சண்முகத்திடம் கேட்டபோது, உடனடியாக துர்நாற்றத்தை போக்க வும், இன்னும் ஒருவாரத்துக்குள் ஊரணியை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.