விளையாட்டு மைதானத்துக்காக கட்சி பாகுபாடின்றி இணைந்த மக்கள்

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்தில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானத்தை பாதுகாப்பதற்காக கட்சி பாகுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

Update: 2024-02-02 12:19 GMT

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்தில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானத்தை பாதுகாப்பதற்காக கட்சி பாகுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.  

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த விளையாட்டு மைதானம் தனிநபருக்கு சொந்தமான இடம் என கூறி இன்றைய தினம் அந்த இடத்தை அளப்பதற்கு அதிகாரிகளுடன் வருவதாக வந்த தகவலையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளையாட்டு வீரர்களும், அந்த பகுதி பொதுமக்களும் கட்சி பேதமின்றி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து பூந்தமல்லி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ. இந்த சம்பவம் குறித்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார். கடந்த 40 ஆண்டுகளாக இந்த இடத்தை பொதுமக்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வரும் நிலையில் இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் விளையாட்டு மைதானம் என இருப்பதாகவும் ஆனால் தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாகவும் அதனை எப்போதும் விடமாட்டோம் எனவும் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் முறையான விசாரணை செய்யவில்லை என உன்னிடம் கூறியதாகவும் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் இந்த விளையாட்டு மைதானத்தை ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அதனை முழுமையாக மீட்கப்படும் என உறுதி அளித்தார்.

அதற்குச் சான்றாக அதே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களுடன் கிரிக்கெட் மட்டையை பிடித்து சுழற்றியும் வீரர்களுக்கு பந்து வீசியும் கிரிக்கெட் விளையாடி தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில் உறுதி அளித்துவிட்டு சென்றார். விளையாட்டு மைதானத்தை மீட்க கட்சி பேதமின்றி பொதுமக்கள் ஒன்று திரண்ட நிலையில் எம்எல்ஏவும் அதற்கு உறுதுணையாக இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Tags:    

Similar News