வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடுகளை காலி செய்ய கூறி நோட்டீஸ் கொடுக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பினர்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 16:40 GMT
வேலூர் மாநகராட்சி 59 வது வார்டுக்குட்பட்ட கன்சால்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் தெருவில் அரசு இடத்தில் சுமார் 45 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். அவற்றை காலி செய்யக்கோரி இன்று திடீரென வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட வந்த மாநகராட்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொது மக்கள் எதிப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
தங்களுக்கு இங்கேயே அரசு வீடு வழங்க வேண்டும் மற்றும் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் எங்களில் 10 பேருக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கியதாகவும்,அரசு வழங்கிய அந்த இடத்தில் ஏற்க்கனவே பலர் வீடு கட்டியுள்ளதால் அங்கும் தங்களால் செல்ல முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.