மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் 310 கோரிக்கை மனுக்களை ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.;

Update: 2023-10-30 12:20 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (30.10.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 310 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 310 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.5,560/- மதிப்பிலான காதொலி கருவிகள் 5 மாற்றுத்திறனாளிகளுக்கும், தலா ரூ.2,780/- மதிப்பிலான காதொலி கருவிகள் 6 மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தலா ரூ.9,050/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் 3 என மொத்தம் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71,630 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மூன்றாம் பரிசாக ரூ.2,000/- என 6 மாணவர்களுக்கும் மேலும் 4 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2,000/-க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்.

Tags:    

Similar News