விருதுநகரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

Update: 2024-07-02 06:08 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமணஉதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்டஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களைபெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக மானியக் கோரிக்கையில் 26 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த 103 நகர்புற பயனாளிகளுக்கு தலா ரூ.4 இலட்சம் மானியத்தில் மொத்தம் ரூ.4.12 கோடி மதிப்பில் புதிதாக வீடு கட்டுவதற்கு பணி ஆணை ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் இளைஞர்களுக்கான நெசவுப்பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 20 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார். மேலும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பாக மண்பாண்டங்கள் செய்யும் குடும்பங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தலா ரூ.21,470 வீதம் 15 பயனாளிகளுக்கு ரூ.3.22 இலட்சம் மதிப்பில் இலவச மின் விசை மண்பாண்ட சக்கரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags:    

Similar News