எஸ்.பி தலைமையில் மக்கள் குறை தீர்வு முகாம்

Update: 2023-11-22 11:29 GMT

குறைதீர் முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு முகாமில் பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் அளித்த புகார் மனுக்களில் காவல்நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 40 மனுக்களில் 37 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள 3 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டது, மேலும் புதிதாக 37 புகார் மனுக்களை பொதுமக்களிடமிருந்து எஸ்.பி பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News