மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-25 06:07 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை மாவட்டத்தில் பாம்பு கடி, மின் விபத்து, நீரில் மூழ்குதல் போன்ற பல்வேறு நேர்வுகளில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரு.7.50 மதிப்பில் நிவாரண உதவிக்கான காசோலைகளையும், கடந்த வாரம் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத் தனைக்கையில் (ஜமாபந்தி) பட்டா வேண்டி மனு அளித்த 30 பயனாளிகளுக்கு பட்டா ஆணைகளையும் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் , உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News