ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.;
மக்கள் குறைதீர் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு,
கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 337 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த ஈரோடு மாவட்டம், பவானி, சோமசுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு உடனடி நடிவடிக்கையாக மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்.