மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி தீவிர வாக்கு சேகரிப்பு;

Update: 2024-07-06 06:13 GMT
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

  • whatsapp icon
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காணை பிரதான சாலையில் பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு வாக்கு சேகரித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ. பின்பு அவர் பேசுகையில் சமூக நீதி என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வதாகும். ஆனால், இடஒதுக்கீடே இருக்கக் கூடாது என்ற நிலையிலுள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக, இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது. எனவே, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உள்ளது. பிகாா் மாநில அரசு அந்த மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த நிலையில், அந்த மாநில உயா்நீதிமன்றம் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்றாா் ஜவாஹிருல்லா.
Tags:    

Similar News