மக்களின் துயரங்களை தீர்க்க வேண்டும்- வானதி சீனிவாசன்

மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் துயரங்களை தீர்க்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-25 14:38 GMT

செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் 

கோவை நெசவாளர் காலனி மாநகராட்சிக்கு  சொந்தமான இடத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து இறகுப்பந்து மைதானத்தை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அமைத்துக் கொடுத்துள்ளார்.இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பின்னர் சிறிது நேரம் இறகு பந்து விளையாடிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இறகு பந்தாட்டம் மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் ஆரோக்கியத்தை மையமாக வைத்து பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். கால நிலை மாற்றத்தினால் புயல்,வெள்ளம் போன்ற பாதிப்புகள் வரும் நிலையில் இந்தியாவ கொள்கையுடன் திட்டங்களை எடுத்து வருவதாக கூறியவர் கார்பான் சம நிலை அலுவலகம் என முன்னெடுப்பாக தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் உருவாக்கி வருவதாகவும் இந்தியாவிலே முதல் எம்.எல்.ஏ அலுவலகம் கார்பன் சமநிலை அலுவலகமாக மாற்றுவது இலக்கு என்றவர் இயற்கை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும் என்றார். தூத்துக்குடி வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக நிதி அளிப்பு குறித்து சொல்லியுள்ளதாகவும் ஆனால் மத்திய அரசு மீது பழி போடுவதே மாநில அரசின் செயல்பாடு உள்ளதாக கூறினார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தேசிய பேரிடர் குழு களத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் முதல்வர் டெல்லியில் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்.பிரதமரை சந்திக்க முதல்வர் செல்லவில்லை என்றும் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க சென்றவர் பிரதமரை சந்தித்து வந்துள்ளதாகவும் இந்நிலையில் நேரம் ஒதுக்கிய பிரதமர் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளார் என்றவர் திமுக தலைவர்கள் வட மாநில தொழிலாளர்களை தரக்குறைவாக விமர்சிப்பது முதல்முறை அல்ல எனவும்  பின்னர்ப்மன்னிப்பு கேட்பதுமாக வாடிக்கையாகிவிட்டது என்றார்.

Tags:    

Similar News