தனியார் பள்ளி வாகனம் ஆய்வு

பெரம்பலூரில் விதிமுறைகளை மீறி பள்ளி வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-05-14 15:15 GMT

ஆய்வு 

பெரம்பலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பள்ளி வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் , தனியார் பள்ளி வாகனம் ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்.....

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 62 தனியார் பள்ளி, கல்லூரிகளின் சார்பில் இயக்கப்படும் 410 பேருந்துகளில் இன்று 120 பேருந்துகளுக்கு முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர கூட்டாய்வு , பணி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில்மே 14ஆம் தேதி இன்று பகல் 1 மணி அளவில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, தனியார் பள்ளி வாகனங்களில் ஒவ்வொன்றாக ஏறி ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வாகனங்களில் அவசரகால வழிகள் சரியாக இயங்குகின்றனவா?, குழந்தைகள் இறங்கி ஏறுவதற்கு ஏதுவாக படிக்கட்டுகள், அமைக்கப்பட்டுள்ளதா, . பேருந்துகளில் முதலுதவி பெட்டி வைக்கப்பட்டுள்ளதா அதில் காலாவதி ஆகாத மருந்துகள் உள்ளனவா என்றும். வேக கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா வாகனங்களில் கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என்றும் ஆய்வு செய்தார். ஆட்சியரின் இந்த ஆய்வின்போது பெரும்பாலான வாகனங்களில் கேமராக்கள் இயங்கவில்லை, இருக்கைகள் சரியாக இல்லை, முதலுதவி பெட்டிகளில் உள்ள மருந்துகளின் காலாவதி தேதியில்லை, படிக்கட்டுகள் சரியாக இல்லாததோடு வாகனங்கள் சற்று அலுக்கு புழுதியுடன் காணப்பட்டதால் ஆட்சியர் சற்று அதிர்ச்சி அடைந்து, இதனைத் தொடர்ந்து இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகே தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து அனைத்து வாகனங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என்றும், மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து பள்ளி வாகனங்களும் அரசு விதிமுறைகளை பின்பற்றி இயக்கப்பட வேண்டும் என்றும், வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கற்பகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆய்வின் போது தீயணைப்புத் துறையின் முன்னெச்சரிக்கை பாதுகாப்புமற்றும் தீயணைப்பு கையாளுவது குறித்துசெயல் விளக்கம் செய்து காட்டினார்கள். இந்த ஆய்வின், சார் ஆட்சியர் கோகுல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜாமணி, உள்ளிட்ட காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், நிர்வாகிகள் பலர், திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News