பெரம்பலூர் மாவட்டம் 6 -வது இடம்
12 -ம் வகுப்பு பொது தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.44% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 6 -வது இடம் பெற்றுள்ளது.;
Update: 2024-05-06 14:19 GMT
12 -ம் வகுப்பு பொது தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.44% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 6 -வது இடம் பெற்றுள்ளது.
2023 2024 கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் அதற்கான தேர்ச்சி மே - 6ம் தேதி இன்று வெளியான நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 3499 மாணவர்களும் 3502 மாணவிகளும் என மொத்தம் 7001 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள், இதில் 3342 மாணவர்களும் 3410 மாணவிகளும் என 6752 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் மொத்தம் 96.44 சதவீதம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் உள்ள 79 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 10 அரசு பள்ளிகளும், ஒரு ஆதிதிராவிடர் பள்ளியும், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 17 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 8 சுயநிதி பள்ளிகளும் என 38 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.