மாணவர்கள் ரத்த சோகை பாதிப்பில் பெரம்பலூர் முதலிடம் - எஸ்பி

மாணவர்கள் ரத்த சோகை பாதிப்பில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. மாணவர்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்,என கோல்டன்கேட்ஸ் பள்ளி ஆண்டு விழாவில், பெற்றோர்களுக்கு மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி அறிவுரை கூறினார்.

Update: 2024-02-04 05:49 GMT

எஸ்பி ஷ்யாம்ளாதேவி 

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள கோல்டன் கேட்ஸ் வித்தியாசரம் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி, நடைபெற்றது, பள்ளியின் தாளாளர் மற்றும் தலைவர். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி கலந்து கொண்டு பேசினார்

அப்போது அவர் தெரிவிக்கையில், மாணவர்களில், பெண் குழந்தைகள் இரத்த சோகையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் பெரம்பலூர் முதலிடம் வகிக்கிறது, எனவே பெண் குழந்தைகளுக்கான உணவில் இரும்பு சத்துள்ள, ஊட்டம் உள்ள உணவுகளை கொடுத்து, பெற்றோர்கள் கவனத்துடன் குழந்தைகளை வளர்க்கு வேண்டும், குழந்தைகளின் உணவில் கவனம் செலுத்த வேண்டும், என கேட்டுக் கொண்டவர், இதேபோல் குழந்தை திருமணம் செய்து இளம் விதவைகள் அதிகமாக உள்ள மாவட்டம் பெரம்பலூராக உள்ளது .

ஆகவே குழந்தை திருமணத்தை தடுத்தாக வேண்டும் கிராமத்தில் அதிகமாக நடை பெறுகிறது. பெண் குழந்தைகள் தங்கள் படிப்பை முடித்து , உயர் பதவிக்கு செல்ல பெற்றோர்கள் வழிவகை செய்ய வேண்டும் , பெண்கள் அதிகமாக படித்து நல்ல உயர் பதவி, மற்றும் அதிகாரம் உள்ள பதவிக்கு படித்து முன்னேற வேண்டும், எனவும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தவர், குழந்தை திருமணத்தை தடுக்க, பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் குழந்தைகளின் படிப்பின் முக்கிய மற்றும் அவர்கள் எதிர்காலம் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சுரேஷ், பள்ளித் துணைத் தலைவர், செயலாளர் அங்கயர்கண்ணி, பள்ளியின் முதல்வர் பவித், துணை முதல்வர் ராஜு, உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News