பெரம்பலூர் : ஏரி புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு
துறைமங்கலம் பெரிய ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Update: 2024-07-01 02:07 GMT
பெரம்பலூர் நகர், துறைமங்கலம் பெரிய ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் பார்வையிட்டார். 120 ஏக்கர் பரப்பளவுள்ள துறைமங்கலம் பெரிய ஏரியில் தூர்வாருதல், ஏரியைச்சுற்றி நடைபாதை அமைத்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்கா அமைத்தல், ஏரியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் கனிமவள அறக்கட்டளை நிதியில் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப்பணிகளை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.